பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 136 — ஆன்றவக் குரலை அறிந்ததும் மகிழ்வோ(டு) அத்தான் என்றே அலறி ஒடிஞள்! இக்குரல் தன்னல் யாவரும் எழுந்தனர். வள்ளி நடுக்குற் றெழுந்தாள், வள்ளியைப் புல்லிய கனவைப் பிய்த்தவன் எழுந்தான்! பேர்த்தியும் மகனும் பெரிய பந்தலில் கோத்த கைகளாய்க் கொண்ட திருமணக் கனவு பாதியில் நின்றிடக் கிழவர் நனவை யேற்று நடப்பதை யுணர எழுந்து வந்தார்; எதிரில் அணிமருக் 60 கொழுந்துங் கருப்பனும் கூடி நின்றனர். - கருப்பன? வென்ருன் கனகுரல் சிங்கன்! 'மருப்புனை மறவா! ஆ’மென மொழிந்தான்! 'கடிகா வலினைக் கடந்தனை யோவெனக் கடிதோள் சிங்கன் கழறிட, 'ஆ'மெனக் கருப்பன் மொழிந்தான்; கிழவர் வியந்தார்! சிங்கர்! என்றன் சிந்தை திரிந்ததே! இங்கிருந் தாலினி என்வாழ் வழியும்; தூக்கி லிடவெனைத் துணியினும் துணிவர் தேக்கிய அன்பனே! தீதின்றி வாழ 76 விரும்பி, நின்றேன்; விளைந்த காவலை மீறி வந்தேன், மருக்கொழுந் தோடு வேற்றுார் அடைந்தென் வாழ்வைக் கழிப்பேன்! தப்பி வந்தனன்; தப்பென் ருலும், ஒப்பி உயர்ந்த உளத்தொடு வந்தேன் வாழ்க்கைக் கணியாய் வனிதை தன்னெடு வாழ்க்கை நடத்திட வேற்றுார் செல்வோம்! என்று பேசினன்; ஏந்திழை மருக்கொழுந் தொன்றுஒன் றெனவே உகுத்தனள் கண்ணிர்!