பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் : 27 அன்போ அறிவோ அற்றவ னுெருவனைப் பண்புடை பானுய்ப் பண்ணுதல் வீணே! இருந்த வுருக்கலேத் திருந்த இருள்போய்த் திருந்திய ஓவியம் திகழ்வது போல ஒளிவெள் ளத்தில் உலகம் மூழ்கிடத் துளிப்பணி நீரிற் ருேன்றும் உருப்போல் உள்ளத் தடக்கிய ஒண்டமிழ் அன்பு வெள்ளம் வெளிப்பட விடிந்ததே அத்தான்!” என்று வள்ளி எழுப்பிடும் முன்னர் நின்றன் எழுந்து! நின்றுமுன் நின்ற ஓவியப் பாவை ஒத்தவள் நோக்கினன். ஆவியும் உடலும் அறவறக் கலந்த 1 9 கடந்த இரவில் குலைந்த அழகுபோய், படர்ந்த அழகப் பாவை முகத்தில் சிரித்தது: செழுமலர்ச் சிரிப்பில் சிக்கி, பிரிந்திட வியலர்ப் பார்வை நீக்கி வாயில் வரவொரு கூட்டம் வந்தது! சேயிழை குடிலுட் சென்று புகுந்தனள். கூட்டத்து மன்றக் குரவரும் நின்றனர். நாட்டுவ தறியாள் நடந்த இரவினில் தன்வீ டடைந்த கருப்பனும் தளிர்க்கொடி தானும் சென்றதைத் திறந்து சொல்லிட 30 நெஞ்சிடர்ப் பட்டது! நிகழ்த்துதல் பற்றி அஞ்சி யிருக்கையில் அவர்களில் ஒருவன் 'கருப்பனும் அவன்மருக் கொழுந்தும் -என் உரைக்கும் முன்னரே, ஒருவரும் இங்கில்லை!