பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 140 — என்றே சிங்கன் இடைமறித் திடவும் நின்றவர் அவனை நீள நோக்கி, ஒன்றும் அறியார் போலுரைக் கின்றீர்! சென்று நோக்குக! சிலைபோ லிருவரும் மாண்டு கிடப்பதை:' என்ருன் முன்னவன்! "மாண்டன ராவென மும்முறை அடுக்கிடக் 36 கொல்லையில் இருந்து கிழவர் விரைந்தே, *'ஒல்லையிற் செல்வோம்’ எனவிரைந் தோடிட வள்ளியும் அன்னவர், வழிதொடர்ந் தனளே! வெள்ளிய அருவி வீழ்ந்த விடத்திற்(கு) அருகில் நின்றதே அவ்வூர் குழுமி! நெருநல் நடந்த நீண்டதோர் காட்சி வள்ளியின் நெஞ்சினே வதைத்ததே! எழில்சேர் கிள்ளையின் இன்மொழி கேட்டது செவியில்! கூட்டந் தன்னைக் குறுகிட, உளத்தை வாட்டுந் தன்மையில் வாழைத் தார்போல் 40 சாய்ந்து கிடந்தனள், சேயிழை நெஞ்சில் மாய்ந்தின் னுயிரைப் பருகிய வாளின் பாதை தெரிந்தது: பக்கத் தவனும் சிதறிய குருதிச் சேற்றில் புரண்டனன். அவன்தன் நெஞ்சில் அவ்வாள் இருந்ததே!

இவளைக் கொன்றபின் இக்கொடும் நெஞ்சனும் தற்கொலை செய்து தானிறந் திருப்பான்’ என்று பலபேர் இயம்பினர்; இறந்த மருக்கொழுந் தின்ஒளி மதிமுகம் வள்ளியை உருக்கிட நின்ற வொண்டொடி நினைப்பாள்: 50

'அன்புடை ஒருவனே அறிவுச் சொற்களாற் 'ஒல்லையில்-விரைவில் 'நெருநல்-முன்னையநாள்