பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- கடு - உள்ளத்தை வேறு ஒரு பாவலன் அறியும் படைப்புக் கமுக்கத்தை உலகுக்குப் புலப்படுத்தி யிருந்தார். இவ்வனைத்துச் சிறப்புகளையும் உள்ளடக்கிய அவ் வயிர வரிகள் என் உள்ளத்தில் ஒளி வெள்ளத்தைப் பாய்ச்சி, உணர்வு மூட்டத்தில் மூழ்குவித்தன. இன்று நினைத்தாலும், அன்றைய மாலேப்பொழுதின் தென்றல் வீச்சு என் உயிரைக் குளிர்விக்கின்றது. பாவேந்தரின் முழு விருப்பத்தின் கீழ் வந்த கொய்யாக்கனியின் முதல் வெளியீட்டுக் கென்று, பழகியம்மா அச்சகம் என்னிடம் ஒருகாசும் பெற்ற தில்லை. அச்சிட்ட படிகளில் முந்நூருே நானுருே போக, அனைத்துப் படிகளையும், திரு. மன்னர் மன் னன் என்னிடம் தந்துவிட்டார். அவரின் பெருந் தகைமையையும் அன்று அவர் என்மேல் வைத்த பேரன்பையும் இன்றும் நன்றியால் நினைவு கூர் கிறேன். அன்றைய அவர் உள்ளத்தை வாழ்த்து கின்றேன். இன்று அவர் எப்படியோ தெரியவில்லை. அடுத்து என் மதிப்பிற்குரிய ஆசான் பாவாணர் அவர்கள் கொய்யாக்கனி'க்குத் தந்த அணிந்துரை பற்றியும் சில குறிப்பிடல் வேண்டும். பாவாணர் அக்கால் சேலம் ந க ரா ட் சி க் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவராக விருந்தார். பெரும்பாலும் அவர் ஒரு நூலுக்குத் தந்த முதல் மதிப்புரை இதுவாகத்தான் இரு த் தல் இயலும். இதன் பின்னரும் கூட அவர் வாளுளில் வேறு ஓரிரு நூல்களுக்குத்தாம் மதிப்புரை தந்துள்ளார். அவர் கொய்யாக்கனிக்குத் தந்த அணிந்துரை மிகப்