பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 143 – தாழம்பூவை- ஒலையின் மலர்' என்றழைப்பதும் ஆசிரி யரின் புதுவழி வகுக்கும் திறனுக்கான சான்றுகளாம். கூறியது கூறலாகப் பல இடங்கள் உள்ளன; தவிர்க்கப் பெறலாம்.... பிற மொழிகளிலெல்லாம் தற்காலக் கவிதை, காவியங்களுக்குத் தக்க படைப்புகளைக் காணுகின்ருர்கள். தமிழ் மொழியிலும் இத்துறை பேணப் பெறுகின்றது என்ப தற்கு இத்தகைய நன் முயற்சி பெரிதும் வரவேற்கத் தக்கதாம். - அனைத்திந்திய வானுெலி. திருச்சிராப்பள்ளி. 28-5-56. 0 புதுமை மெருகு கலந்த காவிய நூல் கொய்யாக்கனி. இதனை எழுதிய துரைமாணிக்கம் அவர்கள் இக் காவியத்தின் மூலம் தம்மைப் பாரதிதாசன் பரம்பரையினர்’ என்று நிலை நாட்டுகிரு.ர்...... பல பல உவமைகளை நூல் முழுதும் அள்ளித் தெளித்துள்ளார் ஆசிரியர். தொத்திவரும் கிளிதன்னைப் போபோ என்று தொங்குகின்ற பழக்குலைதான் கூறலுண்டோ? என்ற கருத்தும் சொற்ருெடரும், இனிமையாகவும் அழகாக வும் பொருள் பொதிந்தவாகவும் இருக்கின்றன. - ~ கவியரசர் பாரதிதாசன் அவர்கள் தந்துள்ள மதிப் புரை, நூலை அணி செய்கிறது. பேராசிரியர் ஞா. தேவநேயப் பாவாணர் அவர்கள் அணிந்துரை வழங்கியுள்ளார். கவிதைப் பித்தர்கள் அனைவரும் வாங்கிப் படி க் க வேண்டிய நூல் இது. சிறந்த முறையில் எழுதிய ஆசிரியரை யும், அழகிய முறையில் அச்சிட்டு வெளியிட்டுள்ள பாரதி தாசன் பதிப்பகத்தையும் பாராட்டுகிருேம். - - . - தென்றல் 18-3-56,