பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 144 — 9 . 27 இயல்களைக் கொண்டுள்ளது இக் காவியம். ஆசிரி யர் ஒவ்வோர் இயலுக்கும் ஏற்ற தலைப்பைப் படிக்கச் சுவைதரும் வகையில் ஆக்கித் தந்துள்ளார்... சிறந்த பல கருத்துகளின் களஞ்சியமாக விளங்கும் நூல் கொய்யாக்கணி. - தமிழ்நாடு, 30.4-56. 0 பழந்தமிழ் மரத்திலே புதுமலர்கன் பல பூப்பதுபோல் இக் காவியத்தின் கருத்துகளும் உவமைகளும் காணப்படு கின்றன. அகவல், விருத்தம், வெண்பா முதலிய பாக்களால் ஆகிய கொய்யாக்கனி' எனும் இக் காவியம், எளிமையும் இனிமையும் உடையது; ஆற்றெழுக்காய்ச் செல்லும் அழகிய நடை அமைந்தது. சிரித்தது வானம்: செங்கதிர் கையால் விரித்தது மலர்களே என்பது போன்ற கற்பனை நயத்துடன் தொடங்கும் இந்நூல், அழகிய புது உவமைகளை இடை யிடையே அள்ளி வீசுகிறது. வறியவர் கண்ணிர் போலப் பெய்ததே’ “நின்றவனைக் கண்டவுடன் தமிழின் பத்தை நினைத்தவுடன் மகிழ்வுகொளும் புலவர் போல', படமேந்திப் பார்வையிட்டு மகிழ்வு கொள்ளும் பயில்கலைஞன் போன்று' - -என வரும் உவமைகள் எண்ணி இன்புறத்தக்கன. செய்யுள் நடை மணிமேகலை, பெருங்கதை ஆகியவற்றை நினைவுறுத்து கின்றது. பண்டைப் பண்பாடும், புதுமை மணமும் விரவிப் பரிமளிக்கும் நல்ல காவியம் கொய்யாக்கனி' - - சுதேசமித்திரன். 3-7-59. Ꭷ