பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-مس- rوع 35 سس۔ பெரியது. கதைச் சுருக்கத்தையும் உள்ளடக்கியது. ஆளுல் கதைச் சுருக்கத்தைத் தவிர்த்து, அணிந்து ரையின் பிற பகுதிகள் அச்சிடப் பெற்றன. பாவா னர் கொய்யாக்கனியின் நூல் முழுவதையும் படித் தார். கதைச் சுருக்கத்தை எழுதினர். இதில், அவர் என்னைப் பற்றிக் கூறிய முன் னறிவிப்பு வரிகள் மிகவும் திட்பநுட்பம் சார்ந்தவை; அவரின் கூரிய எதிர்காலக் கணிப்புக்குக் கட்டியம் கூறுபவை அவை, அவற்றில், அவர் என்மேல் வைத்த அன்பும் மதிப்பும் நம்பிக்கையும் தெற்றெனப் புலப்படுவதை அன்பர்கள் உணரலாம். மதிப்புரையும் அணிந்துரையும் அன்புடன் வழங்கிய அறிஞர்கள் இருவரும், கொய்யாக்கனி யின் இரண்டாம் பதிப்பு .ெ வ ளி வரும் இன்று பொலிவுடம்புடன் இல்லை; புகழுடம்புடன் உள்ளனர். அவர்களின் உள்ளுணர்வு தமிழுடன் கலந்துள்ளது. அவர்கள் புகழ் நீடு வாழ்க என வாழ்த்துகின்றது என் நன்றி நிறை நன்னெஞ்சம். கொய்யாக்கனியின் முதற்பதிப்பு அட்டைப் படத்தை வரைந்த ஓவியர் அய்க்கண். அதன் மூலப்படம் கிடைக்கவில்லை. இவ்விரண்டாம்படத்தை வரைந்தவர் நம் தென்மொழி அன்பர் திரு. ப. அறவாழி ஆவர். அவர்தம் கைவண்ணத்திற்கு நம் நெஞ்சு நிறைந்த நன்றி.