பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழிநூல் மூதறிஞர் ஞா. தேவநேயப்பாவாணர் அவர்களின் அணிந்துரை ...அஞ்சற் கணக்கரும், என் பழைய மாணவருமான துரை மாணிக்களுர் இயற்றியுள்ள கொய்யாக்கனி' என்னும் பனு வலைப் பார்வையிட்டேன். வெண்பாவும், அகலும், ஆசிரிய மண்டிலமும் (விருத்தமும்) இசைப்பாட்டும், ஆகிய நான் மணிகளை விரவிக் கோத்த கோவைபோலும், இப் பனுவலுள் வருஞ்செய்யுட்களெல்லாம், நவின்ருேர்க் கினிமையும், கேட் டோர்க் கின்பமும் பயக்குமளவு சொற்சுவை பொருட்சுவை செறிந்து, ஆற்ருெழுக்கான ஒழுகிசை நடையில் இயன்று, எல்லார்க்கும் பொருள் விளங்குமாறு முந்திரிப்பதமான செம்பாகமாய் அமைந்துள்ளன. அழகும் ஒளியும் அமைந்து பட்டை தீர்த்த மணிகளுடு அவற்றை இணைத்துச்செல்லும் மாற்றுயர்ந்த பொற்கம்பி போல், இப் பாவினங்களுடு தொடர்ந்து செல்லும் கதையும் சிறந்ததொன்ருய் இரா நின்றது. கதைச் சிறப்பு. உள்ளோன் தலைவகை உள்ளது புணர்த்தல், உள்ளோன் தலைவகை இல்லது புணர்த்தல், இல்லோன் தலைவகை உள்ளது புணர்த்தல், இல்லோன் தலைவனுக இல்லது புணர்த்தல். என்னும் நால்வகைக் கதையுள் எதுவாயினும், மக்கள் வாழ்க்கை பற்றியதாயின், இன்பந்தருதல், உலகொடு பொருந்தல், விழுமியது பயத்தல் என்னும் மூவியல்புகளைச் கொண்டிருத்தல் வேண்டும், அல்லாக்கால் கதை சிறவாது. பதத்துறையில் மடம்பட்ட பண்டைக் காலத்தில் உலகியற் கொல்வாத பல தேவியற் கதைக்கூறுகள் ஒரு பயளுேக்கிச் சி றத் தன வாக க் கொள்ளப்பட்டன.