பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Μ Μπιμ L & "Y வேனும், ப கு த் த றி வியக்கம் பரவிவரும் இக் காலத் திற்கு அவை எள்ளளவும் ஏற்கா. கொய்யாக்கனி என்னும் இப் பனுவல் தழிஇய கதை, இல்லோன் தலைவனக இல்லது புணர்த்தலே யாயினும், உள்ளோன் தலைவனக உள்ளது புணர்த்தல்போல் உலகியற் பொருத்தம் உடையது; படிப் போர்க்கும், கேட்போர்க்கும் இன்பம் பயப்பது; பல சிறந்த உண்மைகளை எடுத்துக்காட்டி அறவொழுக்கத்தை வற்புறுத்து வது. திக்கற்றவர்க்குத் தெய்வமே துணை; அல்லது அகதிக்கு அறமே துணை; கெடுவான் கேடு நினைப்பான்; இருதலைக் காதலே இன்பந்தரும்; மெய்வெல்லும், பொய் தோற்கும்’ என்பன இப் பனுவற் கதையால் உணர்த்தப்பெறும் உண்மை களாகும். ஒரு பனுவலாசிரியனின் மதிநுட்பமும்; அறிவுப் பரப்பும், அவன் செய்யுள் திறமையால் மட்டுமன்றிக் கதையமைப் பாலும் வெளிப்படுவனவாம். இப் பனுவலாசிரியர் செய்யுட் செய்வதிற் போ ன் றே புதுக்கதைப் புனைவிலும் தேர்ச்சி பெற்றிருப்பது பாராட்டத்தக்கது. குல, மத, கட்சிச் சார் பின்றித் தமிழாக்கம் ஒன்றையே கருதும் சான்ருேர், பிற் காலத்துப் பெரும் பாவேந்த ராதற் கே ற் ற இவ்விளம் பாவலரைப் பெரிதும் ஊக்கக் கடவர். . . . ; கொய்யாக்கனி' யென்னும் இப் பனுவல் எல்லாத் தமிழர்க்கும் கொய்யுங் கனியாகுக! . . . . ಪಿ } @೬