பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 2 – புட்கள் எழுவது போல நகர்ந்தது ! நல்லிருட் படையினை நசுக்கிய கதிரை வண்டுகள் பாடி வழுத்தின. குன்றம் தேன்கூ டென்னத் திகழ்ந்து நின்றது ! ! 露剑 குன்றின் விளைச்சலைக் கொண்டவர் பல்லோர் குன்று சார்ந்த குறிச்சி தன்னில் வாழ்ந்து வந்தனர் வண்மை யாக ! ஆழ்ந்த கிழங்கினை அகழ்ந்துங் கட்டிய தேன்கூ டழித்தும் தினேவிளே வாக்கியும் ஒடிந்த விறகுக ளொன்ருய்க் சுட்டியும் சுமைகமை யாகச் சுமந்து சென்றே அமையும் விலையினுக் கவற்றை விற்றலும் வேண்டிய பொருள்களை வாங்கலும் வழக்கம்! ஆண்டமைந் திட்ட அமைதி, நகரின் 2證 பழிபடு வாழ்வைப் பழித்தது போல இருந்தது; குன்றடுத் திருந்த வயல்வெளி பசுமை போர்த்தெழில் பரப்பித் திகழ்ந்தது! விசும்பு தடவிய வெற்பும் அழகிய தெரிவையர் தடவிய தோளும் ஊரை அழகு செய்தன! அணங்குகள் சிறுவரை 'எழுந்தது ஞாயிறு எழு’கெனச் சிறுவர் சோம்பல் போக்கிச் சுறுசுறுப் போடு வேம்புதன் ைெடுகரு வேல மரத்தினை நாடிச் சென்று நறுக்கிய குச்சியை ·亭拿 வாயில் வைத்தெழில் வயலின நாடிப் - போயினர் மங்கையர் பொன்போற் குடத்தை ஏந்திய வாறே எழிலுறப் பேசி . அருவியின் நீரெடுத் தழகிய காட்சியைப் பருகிய வாறவர் பைய வருதலும் கண்களிற் பேசுங் காளையர் நோக்கிடப்