பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

~ 4 — 'கூகூ வென்றே குயிலிசை எழுப்பப் பூவின் இளநகை புரிந்த தவள்வாய் ! "மாலே கட்டுவ துண்டோ’ எனவொரு காளை யவளிடம் கழறிஞன் வெடுக்கெனச் 70 சேலை கட்டுவ துண்டோ” என்ருள் ! வாலைச் சுருட்டி வாயினைப் பொத்தினன் ! 'குலுக்”கென நகைத்தாள் கோதை யொருத்தி! வெளுத்தது கன்னம் விளைந்தது நாணம் ! இடக்கைக் கூடை ஏந்திய படியாய், நடக்கைக் காக வலக்கை வீசிக் கூவிய வாறிடைக் கூடையில் உள்ள பூவினைக் கொடுத்துப் புன்னகை வாங்கி வென்று நின்றிடும் வீரன் தோளெனும் குன்று சார்ந்த குடிலை அடைந்தாள் ! & G ஓங்கிய குன்றும் ஒடுங்கிய குடிலும் தாங்கிய செல்வம் தழைத்தோர். போலவும் ஏங்கிய மனத்தை ஏந்துவர் போலவும் ஆங்கவள் உளத்தில் அமைந்தன குடிலில் சுருங்கிய கண்ணும், சோர்வுகொள் தோளும் திரைகொள் உடலும் நரைகொள் தலையும் விரவிய கிழவர் வெடித்த மலர்களைக் கட்டிய வாறுளர்; கன்னி அன்பினைக் கொட்டிய வாருய்த் தாத்தா என்ருள் ! இடு துள்ளிய மகிழ்வோடு தோகை யிடத்து வள்ளி! பூக்கள் விலைபோ யினவா ?” என்ருர்; அந்த இளங்கொடிப் பெண்ணுே மலர்க்கை பிடித்த மலர்க்சு டையினை அருகே வைத்தவர் அருகில் அமர்ந்து பூக்களைக் கண்டதும் பூவையர் எல்லாம் ஈக்க ளென்ன இரைந்தனர் தாத்தா !