இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
-5-
நறுந்தனிப் பூக்கள் நலமுறக் கட்டிய
முறுவல் செய்திடு முல்லையும் மல்லியும்
'உண்டா' வென்றனர் ஒண்டொடி யோர்சிலர்
'கொண்டுவா' என்றார் கோதையர் சில்லோர்;
100
தாத்தா ! மல்லிகை தனியாய்க் கட்டித்
தா‘தா, மாலை நல்விலை போகு’மென்
றஞ்சிறைக் கிளியென அவரிடங் கொஞ்சியும்
பஞ்சுடல் தன்னைப் பைங்கொடி நீவியும்
பொன்கை யால்முகம் ஏந்தியும்
மின்னெனும் படியாய்க் குடில்புகுந் தாளே !