பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல்: 2 'உருவம் நல் உருவம்; ஆளுல் உள்ளம் நன்கில்லே' புகுந்தவள் உணவுக் காகப் புதியன செய்தே இன்பம் மிகுந்தவ ளாகிக் கொஞ்சும் மொழியினல் விளித்த வர்க்குத் தகுந்ததை ஊட்டிப் பின்னைத் தளருடல் சாய்க்க வைத்து மிகுந்ததைத் தானும் உண்ட மகிழ்வினுல் நகையைச் செய்தாள் ! மெல்லுடல் கிழவர் உண்ட களேப்பினுல் அயரக் கிள்ளை கொல்லேயிற் பூத்த முல்லைக் கொடியிலும் பந்தல் தாவும் மல்லிகைக் கொடியி லும்போய் மலர்ந்திடும் அலர்கள் கிள்ளி நல்லிடைக் குடத்தை யேந்தி நீரினைப் பெய்து விட்டான் ! மொக்கினை வாழை நாரில் தொடுத்தன அவள் பூங் கைகள்! பக்கலி லெடுத்துப் பாங்கைப் - . பார்த்துளம், மகிழ்ந்து, முல்லை மொக்கினும் சிறந்த தென்று - முறுவல்செய் தவற்றுள் ஒன்றைத் தக்கதே யென்னத் தேர்ந்து தனக்கென எடுத்து வைத்தாள் !