பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 7 — கோத்திட்ட மலர்ச்ச ரத்தைக் கூடையி லமைய வைத்துப் போர்த்தினுள் நீரில் தோய்த்துப் பிழிந்தவோர் துணியை ! மூலை சார்த்திய நொய்யல் பாயைத் தரையினில் விரித்துப் போட்டு வார்த்தபொன் னுடலைச் சாய்த்தாள் ! வளர்ந்தது பொழுதும் வானில். பருதிசெய் போரால் மேற்குப் பகுதியில் குருதி ஒட்டம் பெருகிற்றே ! குன்றம் வீரப் பெருமகன் நடுகல் போலத் தெரிந்ததே ! ஊரில் உள்ள தெரிவையர் மகிழு மாறு விரிந்தன முகைக ளெல்லாம்; விழித்தன கண்ம லர்கள் ! துடியிடை வெளியில் வந்தாள் ! திண்ணையில் கிழவர் ஏதோ மிடியினை எண்ணி வாட்டம் மேலுறல் போலத் தோன்ற நொடியினை இடையில் காட்டி, நோதலேன் தாத்தா” என்று கொடியென அவரைச் சுற்றிக் குறுநகை புரிந்தாள் வள்ளி.!. உடனவர் நிலையை மாற்றி ஒண்டொடி குழலேக் கோதிக் "கடனிலை; வருத்தம் ஓங்கக் காடுமே டில்லை; நாளும்