பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 10 - காட்டினில் வாழ்தல் போலென் காலத்தைக் கடத்தி விட்டேன்; வீட்டிலோ கங்குல் ! என்றன் விட்டிலுக் கொளியொன் றில்லை.” I g "கொடிக்கொரு கொம்பைத் தேடிக் கொணர்ந்திங்கு நட்டால் இந்தக் தடிக்கிழம் நிறைவி ைேடு கண்களை மூடும்’ என்று வடித்தகண் நீரைப் போக்கி, "வருவது நீதான் ; உன்னை. முடித்திடும் நினைவும் உண்டு ; முடிவதெப் படியோ’’ வென்ருர். 譯, 'வருந்துதல் வேண்டாம் ;” என்ருன் வந்தவன் ; கருப்பஞ் சாற்றை அருந்துதல் வேண்டா மென்று வெறுப்பார் யார் தாத்தா ? கைக்கும் மருந்தில்லை; மணமாம் ! என்றே மேன்மேலும் இயம்பி நின்ருன். பருந்திற்குப் புறவோ ?’ என்று. பதறிற்று கிழவர் நெஞ்சம் ! - 魔芭 பெண்ணினை யவனுக் கீயப் பெரிதான எண்ண மில்லை; கண்ணையன் தன்னை விஞ்சும் காளையைத் தேடி நின்ருர் : அன்னவன் வாராக் காலை அவனையே ஏற்கத் தக்க எண்ணமொன் றிருந்த தானே 'இல்லையென் றியம்ப வில்லை ! . 17