பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல்: 3 நீரிடை விழுந்த தொன்று நிலத்திட்ைக் குதிக்க வெண்ணி ! சூழ்ந்துள துயரெல் லாம்போய்ச் சுடர்க்கொடி தன்மேல் நெஞ்சம் ஆழ்ந்தது கிழவர்க் கந்த ஆயிழை திரும்ப நேரம் தாழ்ந்ததும் ஏனென் றெண்ணித் தவிக்கையில் துளிநீர் வந்து வீழ்ந்ததே அவர்மேல் வானம் வெருவுமா றிடித்து மின்னி. விரைந்தது வாடைக் காற்று. - விரைவினில் கரிய மேகம் நிறைந்தது, கிழவர் வீட்டுள் நெடுக்கெனப் புகுந்து கொண்டார் : மறைந்தது. பருதி ; எங்கும் மஞ்செனத் துரறிப் பின்னே அறைந்தது போல வீசி அடித்தது மழையும் காற்றும் ! குன்றினைச் சாய்த்தல் போல வீசிற்று வலிந்த காற்றே ! ஒன்றினே டொன்று மோதி . ஒடிந்தன கிளைகள் விற்கச் சென்றவள் இன்னும் காணேன் செய்குவ தறியே னென்று நின்றிளங் குழந்தை போலும் நினைத்தவ ரழுதார் மீண்டும்!