பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 13 — வறியவர் கண்ணிர் போலப் பெய்ததே ! அதனைப் போக்கும் அறிஞரின் திறத்தைப் போல அடித்தது காற்ருே! ஒன்ருய் நிறுவிய திருத்தம் போல . நிலத்தினை நிறுவும் நீர் வீண் கறுவுத லாலே புல்லர் கதறலை இடியாங் கொக்கும் ! 4 காட்டிலே வளர்ந்து நீண்ட கடிமரக் கிளையிற் றங்கும் கூட்டிலே பறவைக் குஞ்சு குளிரினல் விறைக்கும்; நீண்ட கோட்டினை இறுகக் கட்டிக் கொண்டுள குரங்குக் கூட்டம் கேட்டிடும் இடிகட் கஞ்சிக் கிளைவிட்டு நழுவி வீழும் ! が j கூடுகள் நனைந்து (வீழக் குஞ்சினை நீர்கொண் டேகப் பேடுகள் தொடரும்; அந்தப் பிரிவினுற் சேவற் புட்கள் தேடுவ தேழை மக்கள் தங்கியோர் இடத்தில் வாழ வீடுக ளின்றி வெட்ட . வெளிகளி லலைவ தொக்கும் ! 6 மெல்லிய கைகள் தம்மால் மேனியைப் போர்த்தி யும்மோர் மெல்லிய வேட்டி யால்தன் தலையினைக் காத்தும் நின்ருர்!