பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 15 — பெருங்கிளே விழுந்த தாலென் பைங்கிளி மாய்ந்த தோ?மென் மருங்கொடிந் திறந்ததோ ? நான் அறிகிலேன் ஐயோ வென்றே இருங்குடில் கூரைத் தண்ணீர் இறங்குதல் போல நீரைச் சுருங்கிய கண்கள் கொட்டக் கதறினர் இருளில் நின்று ! d : பாம்புகள் புற்றுக் குட்போய்ப் பதுங்கின : காக்கைக் கூட்டம் வேம்பினை யண்டிற் றங்கே வெளியிலோர் குஞ்சு மில்லை; காம்புக ளொடிந்து வீழ்ந்த - கடிமலர்க் கூட்டம்; எண்ணித் தேம்பினர் கிழவர் செய்வ தறியாது வருந்தி னரே! 盟盛 மல்லிகைப் பந்தல் சாய்ந்த வருத்தமும், கண்கள் ஒத்த மெல்லிடை வெளியிற் சென்று மீளாத துயரும், சேர்ந்து கல்லிய துள்ளந் தன்னை: கன்னிவந் தடையா முன்னர் வல்லிருள் வந்து போர்த்த, . வகையில்ை கிழவர் தொந்தார்! 13