பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல்: 4 'ஓ'வெனக் கதறி ஞளவ் ஒண்டொடி கிழவரும்-அம் மாவெனக் கதறி அந்த மானினத் தழுவிக் கொண்டார்: பெருமழை சிறிதா யிற்று: பேரிடி குமுற லாக அருகிற்று, காற்றும் கொஞ்சம் அடங்கிற்றே; இருந்தும் மைபோல் இருளிருந் ததனுல் சேய்மை இருக்கின்ற பொருள்கள் தம்மின் உருவங்கள் தெளிவில் லாத உள்ளம்போ லிருக்கக் கண்டார். 1 மேம்படு சினத்தி ளுலே - மற்றவர்க் கிள்னல் செய்தே தாம்படும் அமைதி போலத் தரணிக்கு மழையை யீந்து வான்படும் அமைதி யென்ன வறுமையும் துயரும் நீங்கித் தாம்படும் அமைதி எந்நாள்' என்றனர் கிழவர் கண்டு ! 2 வீட்டினுள் ஒளியைக் கூட்ட விளக்கினைத் தேடிக் கண்டு சூட்டடுப் பண்டை வைத்த தீப்பெட்டி நனைந்த தாலே வாட்டமுற் றதனின் மேலாய் . வள்ளியின் எண்ணம் வாட்ட நீட்டினர் நடையை முன்றில் நின்றிருந் தாளக் கோதை 3