பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல்: 5 வேல்விழி நிமிர்ந்தாள்; வேட்கையோ டொருவன் சேல்விழி பருகிச் சிற்றிடை அசைவின் மேல்விழி வைத்த வாறிருந் தானே! வேண்டுவ தெல்லாம் விளக்கிய பின்னர் நீண்டோ ரமைதி பூண்டது குடிலே! இரவின் அமைதியில் இவர்களின் அமைதி விரவி யிருப்பினும் வெதிர்ப்புறு நெஞ்சிற் புயல்வீ சிற்றப் பொற்ருெடி தங்கை கயல்விழி யுகுத்தது கண்ணிர்; அக்கிளி பூனேயின் கையினிற் பட்டதும், மானென் ருனேயின் கண்முன் பட்டது மொன்றே! வஞ்சிக் கொடியின் வாய்மொழி யொன்றே விஞ்சிய தவனின் வெறிகொள் நெஞ்சை! Ꭵ0 பிறகெனும் பேச்சால் புறவினை விட்டான்! 'சிறகினைத் தீண்டிய சில்லரைச் செய்தியை மறந்திடு" கென்றும் மலர்க்கென மங்கை வெளிப்போய் வருவது வேண்டுவ தில்லை; புலியாற் படுவது பொல்லாத் தீங்கே’ என்றுங் கூறி ஏந்திழை வெளியிற் செல்வதை நிறுத்தினர்; சின்னுள் கழிந்தன: கண்ணையன் வருவதும், கிழவர் தம்பால் பெண்ணைப் பற்றிப் பேசலும், மணத்தை விரைவினில் முடித்திட வேண்டலும், வேற்களுள் 20 மறைவிருந் தேசெவி மடுப்பதும் கிழவர் . அறிவார்; ஆயினும் அவளிட மொன்றும் தெரிவி யாமலே இருந்துவந் தாரே!