பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 22 — கண்ணேய னைப்போய்க் கடிமணம் செய்ய ஒப்பிட வில்லையவ் ஒண்டொடி வாழ்வில் ஒருவகைக் கசப்பவள் உணர்வைக் கெடுத்தது! பெரியவர் இதையும் தெரிந்தா ராயினும் "சரிப்பட் டுப்போம் சடுதியி லவட்கே’ என்னும் எண்ணம் அவரை வளர்த்தது! கன்னல் மொழியாள் காலையி லெழுவதும் 3{} மல்லிகைக் கொடியினை மருவறப் பார்ப்பதும் முல்லைக் கொடிவைத் துவப்பதும், குடிலுக்கு அண்மை உள்ளவர்க் கவைதமை விற்பதும் விற்ற பொருட்கு வேண்டுவ வாங்கலும் உள்ள தினையிட் டுரலில் இடிப்பதும் கொல்லையில் விளையும் கொழுவிய கீரைத் தொகையல் செய்து தருவதும் பேசும் வகையா லவரின் வாட்டம் போக்கலும் அவரும், - -- உலகின் தரத்தினை உணர்த்திடும் வகையில் 玺莎 பலபல கதைகளைப் பாவைக் கியம்பி - உணர வைப்பதும், ஒண்டொடி மகிழ்தலும் நாளும் நடந்து வருகையில்; ஒருநாள் கட்டித் தந்த பூக்களைக் கூடையில் கொட்டித் தந்து, 'கொண்டுபோய் இதனைக்' கணக்கப் பிள்ளையின் கடைசி மருமகள் பிணக்கா ளுள் எனப் பிள்ளையின் மகன்வந் தும்மிடம் சொன்னதாய் உரைத்தி ரே, இம் மல்லியும் முல்லையும் பார்ப்பா ளாயின் பல்லும் வாயும் பவளமும் முத்தும் . 5 (; எனும்படி யாகும்! இனிமேல் அவர்க்கும் மனம்படி வாகும்; பணம்படி கிடைக்கும்; இன்றவள் கண்டால், இருபொழு தினிலும் என்றும் ஒருபடி எடுத்துவா என்பாள்.