பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

- 24 -



பழிச்சொல் ஏற்றிடப் பாவை யஞ்சி
“ஆங்கு வருவதென் அன்னையின் தந்தை;
நீங்குக இவ்விடம் நீர்” என மொழிந்தே
ஓங்கு நிலைப்புனல் தாழ்விடம் நோக்கி
விரைவது போலாய் விரைந்தாள்; அவனும் 90
‘சிறைப்பட் டாளொரு சிற்றிடை’ யென்று
நெஞ்சினைக் கொடுத்தவள் நெஞ்சினை வாங்கிப்
பஞ்சுடற் கிழவர் பார்த்திடு முன்னர்ப்
பறந்தான்; காதல் நெஞ்சைத்
திறந்தான் என்றத் தெரிவை நினைத் தாளே!