பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல்: ? கிளி, சிற கடித்துக் கிளத்துது காதல் என்றுங் காணு திடரவள் நெஞ்சில் நின்றிட வேறென் நினைவும் குன்றி ஒன்றை எண்ணியு மொன்றினைச் செய்தும், நன்றென எதையும் முடித்திரா ளாகிக் கம்பெடு வென்றே கிழவர் கழறிடச் செம்பெடுத் தீதலும், செருப்பென நெருப்பைக் கொணர்தலும் குலுக்கெனக் குறுநகை சிந்தலும் உணர்ந்தார் கிழவர்: - ஒண்டொடி யுள்ளம் முன்னாள் கண்ட முகத்தின் குறிப்பிலும் திண்டோள் தன்னிலும் திளைத்தது; மேகம் 10. பெருமழை பொழிவது போலக் காட்டிச் சிறிதாய்த் துறிச் சிதைவது போன்றே கண்ணுற் பேசிக் கடிதின் மறைந்தவன் எண்ணம் மேலிட, ஏக்கந் தாக்கிடக் கொல்லையில் மணந்திடும் முல்லை யரும்பைக் கொய்திட வென்றும் குடத்து நீரினைப் பெய்திட வென்றும் புறக்கடை சென்று, கண்விழி யோட்டிக் கள்வனைத் தேடிப் புண்விழி யாகிப் புலத்தலும் ஆகப் பொழுது கடத்திடப் பூக்களைக் கிழவர் 20 பழுதறக் கட்டிப் பாவையை அழைத்து, "வள்ளி நான்போய் வருவதற் குள்ளாய்ச் சுள்ளியைப் பொறுக்கிச் சுறுக்காய்ப் பணிகளைக் செய்து முடித்தென் நொய்யல் வேட்டியைத் தைத்துப் பிழிந்து வெயிலிற் போடு; - விற்ற காசில் வேண்டுவ எல்லாம்