பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 28 - வாங்கி விரைவொடு வருவேன் உனக்கு வேண்டுவ தென்ன? விளம்புக வென்ருர். 'எஞ்சிய காசில் இனிது முதிர்ந்த தேறல் வாங்கித் திரும்புவி ராயின் 3 நாச்சுவை போக்கிட மாப்பிசைந் தீவேன்! வெறிமிகக் கொண்டு விரும்புவீர் நீரென, அறிகுவன் என்ருள் ஆய்தொடி யரிவை! கிழவர் நகைத்தே, கீழ்த்திசை வெளுக்குமுன் உழவர் கழனிக் கோடல் போல விரைந்தார்: . அந்த வேற்கண் அவர்போய் மறைந்த பின்னே மலர்முகத் தோடு வாயில் பெருக்கிப் பாயல் விரித்துக் கட்டிய தினயைக் கொட்டிப் பரப்பிக் கண்ணிடை யொன்றுங் கருத்திடை யொன்றும் 40 ஏந்திய வாருய், ஏந்திழை வாய்க்குள் - "கிளி,சிற கடித்துக் கிளத்துது காதல்! அளியிசை யெழுப்பி உணர்த்துது காதல்! மலர்மண மெழுப்பி விழையுது காதல்! தளர்மன. மேனுே தார்புனை மார்ப!” என்றே, - . பாடியும் நிறுத்தியும் பாட்டின் பொருளே நாடிச் சிரித்தும் நன்னுதல் மீண்டும், 'வாடிய உள்ளத் தோடுழல் கின்றேன் வந்திடு வந்தென வரித்திடு வாயே! 50 தேடுமென் கண்கள் துவண்டிடு முன்னர் நாடுவை என்ன நாடுவை யேவெனப் பாடித் திரும்பினள்; பல்லினக் காட்டிக் கண்ணையன் நின்றே கவிதையைச் சுவைத்த காட்சியைக் கண்டாள்; கடிதின் நாணி மீட்சியில் லாளாய் முனிவொடு நோக்கித்