பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 29 - "தாத்தா இங்கிலை! தனித்துளேன் அவரைப் பார்த்திட வேண்டின் பிறகு வரு”கெனக் கூறிய வாறே குடிலுட் புகுந்தாள் ! இசைந்த பாடல்தன் எழிற்பொரு ளொட்டி 6 0 இசைத்தான் பின்வரும் இசையினை நின்று: "கிளத்திய காதற் கிளியினைச் சேவல் விளித்தது வருகென விளித்திடக் காதல் ! உணர்த்திய இசையினை உணர்ந்தோர் இன்னிசைப் பிணைவண் டழைக்குது பேசிடக் காதல்!” என்று மாற்றிய இசையினைப் பாடி, வென்றவன் போலாய் வெடித்த சிரிப்பவன் வாயினைப் பிளந்து வந்தவள் நெஞ்சில் பாய்ந்தது. மேலும் பாவை தன்னிடம் 'கிழவரிங் கில்லாக் காலுனைக் காண 70 விழைந்தேன் பலநாள்: வெறிசெய் கண்ணி! எனைநீ மணந்திட இசைகுவை யாயின் இணையே தின்றி எழிலொடு வாழ்வோம்: எண்ணம் என்ன இயம்புக” வென்முன். 'வினவிய கேள்வியின் விடைகாண் டற்கு நினைவெனக் கில்லை; நீர்மணம் பற்றிய செய்தி யாவையும் சென்றவர் மீண்டதும் எய்திக் கேட்க இவ்விடம் விட்டு நீங்குக இந்நொடி! இன்றேல் நீவிர் - தீங்கினை யடைவீர்!’ என்றனள் தீங்கே 80 அடையினும் முடிவில் அணேந்திடப் போவது சேயிழை யொருத்தி” என்ருன்; அவளோ தனித்துள இளம்பெண் தன்னிடம் மிகையாய் வாயா டுதல்பெரும் வழுவாம்; உடனே செல்லுக வென்று சிறுகுட மேந்தி எரித்திடு பார்வை எடுத்து வீசி