பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் : 8 X یعنبیہ۔۔--۔ தொத்தவரும் கிளிதன்னைப் போ! போ! வென்று தொங்குகின்ற பழக்குலேதான் கூற லுண்டோ? நின்றவனைக் கண்டவுடன் தமிழின் பத்தை நினைத்தவுடன் மகிழ்வுகொளும் புலவர் போல நின்றதவள் நெஞ்செனினும் நிலைகாட் டாது “நின்றிருப்ப தார்’ என்ருள்; நெடிது நிற்குங் குன்றனய தோளுடையான், குழப்பத் தோடும் குளறுகின்ற பேச்சோடும் கோதை பாலாய் 'அன்றெனது நெஞ்சுதனை விட்டுச் சென்றேன் அதைவாங்கிப் போகவந்தேன்’ என்று சொன்னன். குடமேந்தி நின்றவளின் குவளைக் கண்ணும் கொடும்புயலை வீசியவன் கண்ணும் காதல் நடமேந்தி மயலேந்தி நிற்கப் பாவை நானுற்றுப் புன்னகைத்துப் பார்வை வாங்கித் திடமேந்தும் உளத்தோடு துள்ளிச் சென்று திரும்பிவந்தாள்; நீர்க்குடத்தைக் குடிலுள் வைத்தே! படமேந்திப் பார்வையிட்டு மகிழ்வு கொள்ளும் - பயில்கலைஞன் போன்றவனே நெருங்கி நின்றே, 2 'என்நெஞ்சை எடுத்துமது நெஞ்சில் வைத்தீர்! எடுத்துமது நெஞ்சையென் நெஞ்சில் வைத்தீர்! என்நெஞ்சின் நினைவும் அதன் அமைதி தானும் எனக்கில்லை இப்பொழுது: நீங்கள் வைத்த வன்னெஞ்சோ உங்களையே நாடி நின்றென் வாய்மொழிக்குச் செவிசாய்க்கா தென்னை நாளும் துன்புறுத்தும்; தொல்லையேன்; எனது நெஞ்சைத் தந்திடுவீர் உம்நெஞ்சைத் தருவேன்' என்ருள்! 3