பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 33 – அள்ளியெனை ஆதரிக்கும் திருவா ளர்தம் அழகுபெயர் என்னவெனத் 'துள்ளியோடும் புள்ளிமான் நீஉன்னைக் காக்கப் போகும், பெருஞ்சிங்கன் நானென் ருன், நகைத்து நின்ருள். 'சிங்க'னெனும் பெயரைத்தன் வாயால் மெல்லச் சொல்லியவள் நெஞ்சினித்தாள்! முகிலிற் றங்கும் திங்களெனும் தன்முகத்தை வான நெஞ்சில் தோய்த்தபடி மகிழ்ந்திருந்தாள்; கருப்பன் எண்ணம் தங்கிற்ருேர் நொடிவந்து துணுக்கு ற் ருளாய்த் தடந்தோளை நீக்கியவள் அத்தான்’ என்ருள்; பொங்கிற்றே யவனுள்ளத் தின்பம் அந்தப் பூரிப்பால் அன்பொழுக வள்ளி யென்ருன்; 8

வானத்தை வெண்ணிலவு பிரிந்த துண்டோ?

வார்கடலை வெள்ளலைகள் துறந்த துண்டோ? மானத்தை மறத்தமிழர் மறந்த துண்டோ? மறந்ததிலை துறந்ததிலை பிரிந்த தில்லை; ஏனத்தான் நாமுமவ் வாறு தானே: இயம்பிடுவீர்” என்று சொல்ல, 'எழிலைக் கொண்ட சீனத்துப் பாவையே மறப்ப தென்னின் செந்தமிழை மறந்தவய்ைப் போவேன்’ என்ருன் 9 'பெற்றவளைத் துறந்துவிட்டேன்; அன்பைக் கொட்டிப் பேணிவந்த தந்தையினை விழந்து விட்டேன்! சிற்றிடையில் எனேவைத்து நிலவு காட்டிச் சிரித்திடுங்கால் சோறுாட்டி வளர்த்த பாட்டி, இத்தரையில் இல்லை! னக் காவதெல்லாம், இருந்துவரும் பாட்டன்தான்! அத்தான் உம்மைப் பற்றுகின்ற கொடியதனைத் தளர்த்தி வாழ்வைப் பாழாக்கி விடவேண்டாம்” என்று கூற, 10