பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகவையிலேயே எழுதத் தொடங்கி விட்டேன். கை யெழுத்து இதழாசிரியனுகவும் இருந்தேன். நான் நடத்திய குழந்தை என்னும் கையெழுத்திதழை அப்பொழுது விரும்பிப் படித்தோர் என்னையொத்த மாணவர்கள் பலர் ஆவர். குழந்தை ஆசிரியர் என்றே என்னை அவர்கள் அழைப்பார்கள். கெளளி' என்பது அப்பொழுது நான் வைத்துக்கொண்ட புனைபெயர். அருணமணி' (மாணிக்கம்) என்பதும் இன்னுெரு பெயர். அக் காலத்திலேயே எனக்கு நிறைய சுவைஞர்கள் இருந்தனர். அவர்களுள் தீனதயாளன் என்பவன் எனக்குக் கி ைட த் த தலையாய சுவைஞன். தெலுங்கைத் தாய்மொழி யாகக் கொண்ட அந் நண்பன், நான் ஒவ்வொரு நாளும் எழுதிய கதை, பாடல்களேத் தவருமல் படிக்கச் சொல்லிக் கேட்பான். சிலநேரம் அந்தப் பணிக்கென நான் அவனுக்குத் தின்பண்டங்கள் வாங்கிக் கொடுத்து, என் எழுத்துகளைப் படித்துக் காட்டி வந்தேன். படிக்கும்பொழுது அவர் கொட்டிய ஆஆ. ச்சூ ச்சூ போன்ற ஒலிகள் இன்னும் என் செவிகளில் ஒலித்துக் கொண்டுள்ளன. அவன் என் எழுத்துகளை மெய்மறந்து கேட்டுச் சில நேரங்களில் வாய் விட்டுச் சிரிப்பான்; சில கதைப்போக்குகளைக் கேட்டுக் கண்ணிர் வடிப்பான்! அந்த இளம் சுவைளுனை என் வாணுள் உள்ளவரை எ ன் ஞ ல் மறக்கவே முடியாது. இன்றும் அவனை நினைந்து நன்றியுடன் போற்றுகின்றேன். ம ன த் த ல் வணங்குகின்றேன். அவன் வடித்த கண்ணிராலும், நகை முழக்கத்தாலும் வளர்ந்த பாவியங்களே மல்லி கையும் இக் கொய்யாக்கனியும் ஆகும்.