பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொத்திவரும் கிளிதன்னைப் போ போ வென்று தொங்குகின்ற பழக்குலைதான் கூற லுண்டோ? கத்திவரும் வண்டினத்தை வேண்டா மென்று கழறுகின்ற மலர்க்கூட்ட முண்டோ? அன்பே! செத் தொழிதல் வாழ்வாகும் நமக்காம் என்ருல் சிரித்தபடி மரித்ததனை அடைவோம்” என்ருன்! தொத்தினுள் தடந்தோளே! தழுவிக் கொண்டான்! தோகையின தெழிற்குழலை நீவி நின்ருன்! 1 ! பெரியவரின் நினைவுவர 'அத்தான் மாலைப் பொழுதாகி விட்டதினித் தாத்தா மீள்வர் பிரியும்படி யாகிவிட்ட ததற்குள்’ என்ருள்! பேடுதனைத் தழுவியவன், 'அன்பே, உன்னைப் பிரிதலினுற் பெருந்துன்பம் மிகுதல் போலும், பேரிருளும் சூழ்ந்துவிடும்! எனினும் காலைப் பரிதியினுக் கொதுங்குகின்ற இருள்போல், உன்னைப் பார்ப்பதனால் ஒழிந்துவிடும் துன்பம்’ என்ருன்! 12 ஆடுகின்ற கொடியொன்றின் மலரைக் கிள்ளி, அணிமுகத்தை யேந்தியவள் குழலில் வைத்தான்! வாடுகின்ற உள்ளத்தோ டவனை நோக்கி, 'வருவீர்அத் தான்நாளைக் கென்ருள்; அன்னுன் தேடுகின்ற நிலைவாரா தென்று கூறித் - தெரிவையிடம் விடைபெற்றுப் பிரிந்து சென்ருன்! நாடுகின்ற பொருள்வேறு; செயல்கள் வேறு: நாட்டமெலா மவன்மீதா யாளுள் நங்கை. 13