பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் : 9 புன்னேயில் உள்ள சிட்டுப் போகாது தென்னைக் கென்ருள்! நங்கையின் செயலி லெல்லாம் நலிவினைக் கிழவர் கண்டார்! பொங்கிய மகிழ்வு தன்னுல் புன்னகை விளையும். ஏதோ, தங்கிய வருத்தம் அந்தத் தன்மையை மாற்றும் இன்னே கங்குலும் ஒளியும் மாறும் கருத்தென்ன வென்று கண்டார்! ஒருங்குற மாலை கட்டி ஒக்குமோ ஒக்கா தோஅப் பெருங்குன்றத் தோள்கட் கென்பா பெரியவர் கண்டு விட்டால், மருங்கொடிந் திடுவாள் போல * நானுவாள்! நகைப்பாள் நீண்டு நெருங்கிய புருவங் கொண்ட நீழ்விழி சுருக்கிக் கொள்வாள்! தினையினை உரலி லிட்டே இடிக்கையில் அவனைப் பற்றி நினைவில்ை உலக்கை மாறி நல்லுரல் மீதிற் பாயும் - ச.அனநீரைக் கொணர்ந்து சாலிற் சாய்க்கையில் நிறைந்த தென்னும் நினைவற்று மேலும் ஊற்றி நீர்வழிந் தோட நிற்பாள்.