பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 36 - தண்ணிரைக் கொதிக்க வைத்துத் "தாத்தாநீர் வருக வென்ருள்! புண்ணுடல் கழுவல் போலப் பெரியவர் உடலை நீவி, மண்ணினுள்! தானும் பின்னை, மணியுடல் குளித்து வந்து, பண்ணியம் உண்ணச் சொல்லிப் பாவையும் உண்ணச் சென்ருள். பண்ணியம் உண்ட பின்னைப் பெரியவர் வெளியில் வந்து திண்ணையி லமர்ந்த வாறு வெற்றிலை மெல்லும் போது கண்ணையன் அங்கு வந்தான்! கிழவரோ அவனை வந்து திண்ணையி லமர வைத்து வரவினைத் தெரியக் கேட்டார்! "திருமணம் பற்றிக் கேட்க தினமும் நான் உம்மைத் தேடி வருவதும் போவ தும்நல் வகையில்லை; நீங்கள் பெண்ணைத் தருவது பற்றிக் கொண்ட முடிவென்ன உரைப்பீர்' என்று புருவத்தை உயர்த்திக் கேட்டான்; பெரியவர் அமைதி பூண்டு, 'முடிவான எண்ணம் என்ன? முடிவினில் பார்ப்போம்” என்ருர்! "படிவான பேச்சாய் இல்லை; பாவையைக் கேட்பீர்' என்ருன்!