பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 39 — அரியவோர் வாழ்வை ஏற்பாய்! அன்றிநீ வாழ்தல் என்றும் அரிதென்றே கூறி விட்டே அகன்றனன் விரைந்தெ ழுந்தே! 14 முதியவர் கண்கள் நீரை உதிர்த்தன. வள்ளி நெஞ்சம் கதியிலாக் கலம்போல் ஆகிக் கனத்தது! கருப்பன் எண்ணம் மெதுவாக அவளுள் ளத்தே மின்னிட வெகுண்டாள்; எதோ சதிசெய்வான் போலச் சென்ற - சாயிலை நினைவு கூர்ந்தாள்: | வெட்டுதல் போலப் பேசி விட்டன; அவன்,வெ குண்டால் பட்டுப்போம் வாழ்வே! என்றும் படபடப் பாகா தென்ருர்! கட்டிய பின்னர் ஏற்கும் இறப்பிற்கு முன்னி றத்தல் எட்டுணைச் சிறப்பாம் என்றே இயம்பினுள் அவர்பால் வள்ளி! 16 ‘வாதுசெய் தவனுள் ளத்தை வாட்டிய்ை இனிமேல் அன்னன் சூதுசெய் வானே! உன்றன் சுடர்விடும் வாழ்வில் நின்று தீதுசெய் வானே! நம்மைத் . தேற்றுதற் கெவரு மில்லை! ஏதுசெய் வேன்.அம் மாவென் .. றியம்பினர் கிழவர் நொந்தே! 17