பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் : 1.0 வறுமை வறுமை வறுமை என்றே, இருகை யேந்தி யிரந்திடும் நிலையை ஏன்வர விட்டீர்? ஒன்ருய்க் கலந்த உள்ளத் தொன்றைச் சென்று கலந்திடச் சென்ருள் குடத்தொ(டு) அணைந்த தென்றலுக் கவனது நெஞ்சும் பிணைந்த பாவைக் கவனது நினைவும் தந்து, குன்றம் தருகின்ற அழகில் சிந்தும்! அழகினைச் சேர்த்தவன் போல எழிலொடு நின்றவ னிடத்தவள் சென்று பொழிலிற் புரண்ட தென்றலின் மேலாய்க் குளிர்செய் கையால் குன்றுதோள் தடவ ஒளிசெய் நகையால் ஒண்டொடி பற்றிச் § {} சிற்றிடை அணேந்த சிறுகுடம் நீக்கிப், புற்றரை வைத்தான்; பாவையும் அவன்கைப் பற்றிய வாறவன் பின்செல, அவன்போய்க் கொட்டிய புனலின் குளிர்ந்த சாரலில் அமர்ந்தான்; அவளையும் அருகினில் அமர்த்தி! வள்ளியின் எண்ணம் வாட்டிட, அவள்வெறுத் தெள்ளிப் பேசிய எண்ணம் கண்ணையன் நெஞ்சைத் துளைத்திட நிலையிலா தவனும் செஞ்சொற் கிளியும் சிங்கனும் அமர்ந்த இடத்திற் கப்பால் இருந்தனன்; இவர்களை 30 அவன்சண் ணுற்றதை அறியார் அவர்கள்! என்ன பேசுவர்? ஏது நடந்திடும்? அன்னவன் யாரென அறியா வாறு