பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 42 -- பேசினள் என்பால் பேதை அவனிடம் கூசுவ தின்றிக், கொடியிடை தந்தே, அன்னவன் தோளில் அவள்கை யிட்டே என்ன முறையினுல் இவளிவ் வாறு நடந்து கொள்கிருள், நாணம் விடுத்தாள்! கடந்த காட்சியைக் கண்டவர் மறுப்பரே! பார்த்திடு வோமவர் பயில்வதை என்றெணிக் 38 கூர்த்த விழியொடு கொடும்புதர் ஒன்றில் மறைந்த வாறிருந் தானவர், மகிழ்வால் நிறைந்த காதலின் நினைவொடு பேசினர்! பூத்திடும் முல்லையிப் பொழுதிற் குள்’ளெனக் காத்திடும் வாருய்க் காத்திருந் தீரோ!“ என்றே இயம்பினள் இருங்குழற் கோதை, 'நன்றே கூறினய் நன்றே கூறிய்ை! இடைவைத்த குடமும் எனேவைத்த நெஞ்சும் படைவைத்த கண்ணும் பசிவைத்த உணர்வும் கொண்ட ஒருத்தியின் கெண்டை விழிகள் 4 & காணுமா வென்றே காத்திருக் குங்கால். குன்றம் எனக்கொரு கொடுங்கதை கூறிட நின்று கேட்டென் நினைவை யிழந்தேன்! பாதிக் கதையில் பொதிமலர் மாலை தோளில் விழுந்திடத் திரும்பிக் கண்ட்ேன்: விட்ட கதையினை விடாமற் கேட்கப் பட்ட பாடு பலப்பல பட்டும் குன்றதைக் கூற மறுத்ததே என்ருன்! 'நன்றே அத்தான் நானும் அறிந்திடப் பாதிக் கதையினைப் பகர்வீர்; மற்ற 50 மீதிக் கதையினை மேலே கேட்போம்!" என்றவள் இயம்பிட எழுந்த வுணர்வொடு குன்றம் கூறிய கதையினைக் கூறுவான்!