பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 43 — ‘விரிதமி ழகத்து வேண்டிய செல்வம் பரந்து கிடந்திடப் பார்க்கும் இடந்தெறும் வறுமை வதைத்திட வாடும் மக்கள் சிறுமை எய்திச் சீரழி கின்ருர்! வாய்ந்த காவிரி வளத்தில் விளைந்து சாய்ந்த செந்நெலும், செறிந்த கம்பும், மேழியின் முனையில் மிளிர்ந்த வரகும் 60 கேழ்வர கோடு கிளர்ந்த சாமையும், தும்பித் தலைபோல் துளிர்த்த சோளமும், செம்பு நிறத்தில் செறிந்த தினையும், துவரைச் செடியொடு தொடர்ந்து விளைந்திடும் அவரைக் கொடியில் அணைந்த பயறும், சிறுமணி வகையும், பெருமணி நிறைவும் எள்ளொடு கொள்ளும் எழிலொடு விளைந்தே அடர்ந்த கன்னலும் அங்கிளி கொஞ்சும் படர்ந்த தென்னையும், பழுத்துச் சரிந்திடும் வாழையும், வான்தொட வளர்ந்த கமுகும், 70 மாவும் பலவும், மலைவிளே பலவும், யாவும் விளைந்திட யாறுகள் நிறைந்தே உடுக்கைக் கருவியும் உண்டிப் பொருளும் கிடக்க மக்களின் கிளர்ந்த பசியை அடக்கிட வழியொன் றறியார் போல வறுமை வறுமை வறுமை என்றே இருகை யேந்தி இரந்திடும் நிலையை ஏன்வர விட்டீர்? இங்குள மக்கள் கூன? குருடா? கோழையா என்ன?. காலச் சங்கொலி காதிற். படுமுன் 80 சேலைத் தலைப்பினை இழுக்கும் மகவை விட்டுச் சென்று வேலையை ஏற்குச்