பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- டு - 1951-52இல், என் கல்வியை ஒருவாறு முடித் துக் கொண்டு வேலேக்கு அலைந்தேன். அப்பொழுது எனக்குத் திருமணமும் ஆகியிருந்தது. என் மூத்த மகள் பொற்கொடியும் அப்பொழுது பிறந்திருந்தாள். சில காலம் கூட்டுறவுத்துறையில் பணியாற்றிய பின் மீண்டும் வேலேக்கு அலைந்தேன். அதற்குள் இரண் டாவது குழந்தையாக என் மூத்த மகன் பூங்குன்ற னும் அக்கால் பிறந்து விட்டான். என் தந்தையார் எனக்கு எப்பொழுது வேலைகிடைக்கும் என்று கணியமெல்லாம் பார்த்தார். கணியர் ஒருவர் என் மகன் பிறந்த ஒன்பதாம் மாதத்தில் எனக்குக் கட்டா யம் நிலையான வேலை கிடைத்துவிடும் என்று கூறி யிருந்தாராம். இருப்பினும் இடைக்காலத்தில் ஒரு வேலே கிடைக்குமென்றும்,அது நிலைக்காது என்றும் அவர் கூறியதாகத் தந்தையார் என்னிடம் கூறி என்னைத் தேற்றி வந்தார். அவர் கூறியது போலவே,1954 ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் ஒதுர் பக்கத்தில், அன்செட்டி என் னும் யானைக்காடுகள் நிறைந்த பகுதியில், கான் துறையில் தன்னந் தனியான அலுவலகம் ஒன்றில் எழுத்தராகச் சில நாட்கள் பணி செய்தேன். அந்த வாழ்க்கையெல்லாம் சுவை மிகுந்தது. அதைத் தேவைப்படும்பொழுது எழுதுவேன். இறுதியாகக் கணியர் கூறியபடியே, என் மகன் பூங்குன்றனுக்கு ஒன்பதாம் மாதம் தொடங்கு கையில், (1954) புதுச்சேரியில் அஞ்சல் எழுத்தகு கப் பணியேற்றேன். பாவேந்தர் பாரதிதாசனுரின் நெருங்கிய நட்பு கிடைத்தது. அன்ருடம் அலுவல்