பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 45 – துணிவுடை நெஞ்சும் திகழ்வன வெங்கும் வறுமை ஒட்டிடும் வளங்களை விட்டீர்! பெருமை குன்றிடப் பிழைபல செய்தீர் பழிபடு வாழ்வைப் படாதென வொதுக்கிநல் வழிபடு வாழ்வை வகுப்பீர் வகுப்பீர்' என்றே, குன்றம் கூறிய கதையினைக் கூறிட வள்ளியின் கண்கள் வடித் தன நீரை! அத்தான் இன்றே அறிந்தேன்; 'ஏழைகள் 拜露台 செத்து மடியும் சீரிலா வாழ்வை ஒழித்துக் கட்டுவ தொன்றே நம்மின் தனித்த வாழ்வின் தளராக் கொள்கை: இனித்த வாழ்வில் ஏற்றம் பெற்ருேர் ஒவ்வொரு நலத்தை உடையவ ராயின் எவ்வள வாகும் இனியமுன் னேற்றம்! சாதி ஒழிந்து சரிநிகர் என்னும் நீதி பரவும்! நிலவிடும் அமைதி, குறைகள் நீங்கிட, கொள்கை ஒதுங்கிட விரைவினில் மகிழ்வும் விரவிடும் நாட்டில்! 130 "சிங்கன் என்னும் சீர்ப்பெயர் பூண்டீர்! எங்கும் மடமை இல்லா தொழித்திட, நாட்டுமுன்னேற்றம் நாட்டுதற் கேற்ற கூட்டுற வெப்படிக் கூடிடும் அத்தான்? பலபல மக்கள் பலபல மொழிகள் பலபல பழக்கம் பண்பா டொழுங்கும் கொண்டொரு நாடு கூடுவ தெங்ங்ன்?” என்ருள் வள்ளி! இயம்பிடு கின்ருன்; ஆமாம் வள்ளி! அவ்வா றமைப்பது கடினம்: இருப்பினும் கூறிடுகின்றேன். 140