பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 46 – உலகிற் பற்பல ஒழுங்கும், பண்பும் நிலவி இருப்பினும் நேரெது வளைவெது? துன்பம் இன்பம் தனித்தனி என்னஎன்பன வெல்லாம் யாவர்க்கும் ஒன்ரும்! யாவரும் உண்பர்; யாவரும் துயில்வர்; சாவதும் ஒன்றே; சலியா துழைப்பின் எல்லா உயிரும் இடர்ப்படும்; இன்னே எல்லா வுயிர்க்கும் ஏற்ற நியதிகள் பலவாம்; அதற்குப் புறம்பா யுளதும் சிலவாம் அந்தச் சிற்சில வற்றுள் 1 5 0 ஒழுங்கும் மொழியும் உயர்ந்தும் தாழ்ந்தும் மழுங்கும் நிலையும் மற்றும் சிலவும் அடங்கும் வள்ளி! அன்னவை கூட அடங்கும் அறிவில்; அவ்வறி வால்தான் கோணல் நிலையெது? கூடா தன எவை? நாணல் நிலையெது? நன்மையும் தீமையும் விளைவது எதல்ை? என்று விள்ளுதல் விளையும் அந்த விளைவின் பயனல், பசியெனும் நிலையைக் பொசுக்கிட வேண்டும் நசியாக் கொள்கை நசித்திட வேண்டும்! 芷给盘 என்று பலவா றியம்பிடு கின்ருேம்! நன்று வள்ளி! நாமுள நாட்டிற் கென்ன பெயரென் றியம்பிடு கென்ருன்! 'திரவிட நாடெனத் தேன்மொழி சொன்னுள்; 'திரவிடம் என்பதன் திரண்ட பொருளினை அறிவா யோ’வென் றவளைக் கேட்டிட அறியேன் என்ருள் ஆய்தொடி நங்கை! 'தமிழம் என்பது தமிழின் பழம்பெயர்: தமிழம் என்பது வடமொழித் தொடர்பில் திரமிளம் என்றே திரிந்திடும்! அச்சொல் 170