பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 47 — திரவிடம் என்று திரிந்தது! பொதுவாய்த் 'திரவிடம் என்ற தென்மொழி நின்று விரிந்த மொழிகள் வெவ்வே ருயின! தமிழ்மொழி யென்பது தலைமொழி! அதனை அடுத்துத் தெலுங்கும் அணிகன் னடமும் துளுமலை யாளமெனத் தொடரும் மொழிகள் பதின்மூன் ருகும் பழங்கா லத்தில் இந்திய நாடு முழுமையும் திராவிடம் சிந்திய மொழிகளாற் சிறந்தது! வடமொழி ஆரிய மொழியென வழைக்கப் பட்டதே! 置怒母 ஆரியங் கலந்த அந்தமிழ் மொழியே பன்மொழி பிரிந்திடும் பாதையை வகுத்ததே! இம்மொழி யெல்லாம் காலச் சுழலில் பல்வகை யாகிப் படர்ந்தது! கிடக்க! தமிழ்நாட் டவர்க்குத் தமிழே விழியாம்! இன்ன வாறே எந்நாட் டவர்க்கும்! என்ன வாயினும் எல்லா மொழியையும் ஒழித்துக் கட்டுதல் ஒவ்வாச் செய்கை! பழித்துக் கூறலும் படியா தவர்செயல்! ஆகையி னற்ருன் அவரவர் நாட்டில் 19 () அவரவர் மொழியில் அரசியல் வேண்டும்! அவ்வகை வந்தால் மொழியால் மக்கள் ஒன்று படுவர் என்பது திண்ணம்! ஒன்று பட்ட ஒருமொழி யாட்சியில் உழைப்போர் வாழற் குதவிட வேண்டும்!" என்று கூறிட ஏந்திழை அத்தான் நன்று கூறினீர்! நான்கேட் கின்றேன்: பலமொழி பகரும் பற்பல நாட்டிடை நிலவிடும் ஒற்றுமை நிலைக்குமா? வென்முள்! 'முடியும் எங்ங்ன் முடிந்திடு மென்ருல் 200