பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 48 — படியும் அரசியல் பகுத்திடு வோர்கள் மற்ற மொழியின் மற்ற அரசியல் கற்ற புலவரைக் கலந்து கொள்கையை வகைசெய் திடற்கே வழிசெயல் வேண்டும்! கொள்கை ஒன்றைக் கூறிடும் முறைகள் வெவ்வே ருகும்! வேண்டுவ தொன்றை அவரவர் மொழிகளில் அறிந்திட வேண்டும்! நாட்டுக் கூட்டுற விப்படி யென்ருல் நானில உறவும் நன்ருய் முடியும்' என்றே இயம்பினன் சிங்கன்! அவன்தன் 3 10 குன்றின் தோளிற் குங்கும முகத்தைத் தோய்த்தே, அத்தான் திரள்கருத் தறிய வாய்த்த நிலையினை வாழ்த்து கின்றேன். விரிந்த அறிவில் விரிந்த காதல் செறிந்த அழகில் செறிந்த காதல் ஒட்டிய வுளத்திற் கெட்டிய காதல் அட்டியே இல்லை; அழியா தென்ருள்! சொட்டும் தேனைச் சுவைக்கா தவனும் கிட்டும் அறிவினைக் கேளாதவனும் வாழ்வில் முன்னேறி வருவதே இல்லை. 22 () ஆழ்ந்த கடலின் அணிமுத் தே'இனி என்ன குறை'யென இயம்பிய வாறே பின்னல் இழுத்தப் பாவையின் இதழில் தன்னிதழ் ஒட்டித் தந்தமுத் தத்தால் பொன்ைெளி படர்ந்திடப் பைங்கிளி எழுந்து, "தாத்தா நெடுவழி நோக்கிய வாறு காத்திருப் பாரெனக் கூறிய வாறு பிரியா விடையினைப் பெற்றுப் பிரிந்தாள்! நிகழ்ந்த காட்சியை நேரில் கண்ட கண்ணையன் சினந்தான்! கொடுமை 236) பண்ணும் வழியினைப் படர்ந்தது நெஞ்சே!