பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 51 - குடித்துள மயக்கத் தாலே, குழறிய படியாய்ப் பேசிப் படுத்தனர்; சிறிது நேரம் பறந்திடத் தாங்கி விட்டார்! உடுத்துள உடைகள் எல்லாம் ஒழுங்கற்றுக் கிடக்கத் தம்மை அடுத்தவர் வரவு மோரா(து) அமைதியா யுறங்கி னரே! விரைவினி லிரவு நீங்கி விடிந்தது! விழித்தார்! தீங்கின் கரைகண்ட உள்ளத் தோடு கண்ணையன் பேச லானுன்! "திரையுடற் கிழவர் பேத்தி தெரியுமா கருப்பா’ என்ருன்; உரைதரின் விளக்க மாக உணர்குவன்’ என்ருன், தீயோன். கொடியென வுருவும், வானின் குளிர்நிலா முகமும், மின்னும் துடியிடை யெழிலும், காலைத் தொடுகின்ற குழலும், துன்ப நொடிசெய்யும் குவளைக் கண்ணும் நுதலெனும் பிறையும் கொண்ட தொடியெழி லோவி யத்தைத் தெரியாதா கருப்பா? என்ருன்! 'அருவியின் குளிர்மை யும்அவ் வணங்கின துடலும் ஒன்ருே? குருவியின் துடிப்பும் அன்னுள் குவியிதழ்த் துடிப்பும் ஒன்ருே?