பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடிந்ததும் பாவேந்தர் வீட்டில்தான் எ ன் னே ப் பார்க்கலாம். அக்கால் அவருடைய உண்மையான உள்ளத்தன்பையும், நம்பிக்கையையும் நிறையப் பெற்றிருந்தேன். . 1954-இல் பாவேந்தரிடம் நிலேயர்ன தொடர்பு ஏற்படுவதற்கு முன்பே 1951-இல், ஒரு மு ைற பாவேந்தரிடம் புதுவைக்கு என் மல்லிகை பாவியத் துடன் அவரைப் பார்த்து மதிப்புரை வாங்க வந்தி ருந்தேன். ஆணுல், ஏதோ காரணத்தால் அந்தச் சந்திப்பு வெற்றி தரவில்லை. இது பற் றி என் கணிச்சாறு பாடல் தொகுப்பில் விரிவாகக் குறிப் பிட்டுள்ளேன். . . ஆல்ை, 1954-இல் மீண்டும் புதுவை வந்து பாவேந்தர் நட்பு நெருங்கியிருந்தபொழுது, 1955 தொடக்கத்தில் கண்ணதாசனின் தென்றல்’ இதழில் ஓர் இலக்கியப் போட்டி ஒன்று அறிவிக்கப் பெற்றி ருந்தது. அதில் தேர்ந்தெடுக்கப்பெறும் பாவியத் திற்கு ஆயிரம் உருபா பரிசு என்றும் அறிவித்தி ருந்தார்கள். அப் போட்டிக்குத் தேர்வாளாராகப் பாவேந்தர் அமர்த்தப் பெற்றிருந்தார். அந்தப் போட்டி அறிவிப்பு வெளிவந்தவுடன் ஒருநாள் மா8ல, பாவேந்தர் என்னிடம் போட்டி வந்திருக்கிறது, தெரியுமா என்று கேட்டார். தெரியும் என்றேன். 'நான்தான் தலைவன்; நீ எழுது, உனக்குத்தான் பரிசு;வேறுயாருக்குத் தரப்போகிறேன், நான் என்று முத்தாய்ப்பு வைத்து விட்டு, இதுவரை ஏதாவது பாவியம் எழுதி வைத்திருக்கிருயா? என்ருர். நான் உடனே,'ஆம்'என்று கூறிவிட்டு,மல்லிகை, பூக்காரி