பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் : 1.2 கூட்டி லுடைந்ததேன் கொட்டுவதைக் காணென்ருள் நீட்டி யிதழ்தந்து நின்று! - காணு தறிவைக் கண்டவ னிடத்துப் பூணு தன்பைப் பூண்டவள், மறுநாள் கிழவர் கைகளில் கிள்ளிய மலர்களை, அழகுறக் கட்டி அளித்தலும், அவரதை வாங்கிய வாறு வழியைத் தொடர்தலும் நடந்த பின்னர் நெஞ்சம் நாடிய தடந்தோள் மறவனைத் தடம்பார்த் திருந்தாள்! இடையொடிந் திறுமுன் ஏறுபோ லன்னவன் நடைகண் டோடி நன்மொழி கூறி - மல்லிகைக் கொடியின் மருங்கில் தங்கிய Its நன்னிழ லண்டை நடத்தி வந்தனள்! . உன்னுரு வில்லா ஒவ்வோ ரிடமும் புல்லுரு மிகுந்து புனையெழில் குறைந்து, என்னுடல் வாட்டி என்னுயிர் வாங்கும் வல்லிட மாகி வதைத்தது வள்ளி!’ எப்பொழு திவ்விரா ஏகிடும் உன்னை எப்பொழு தடையலாம் என்றிருந் தவ்விரா ஏகிய பின்னை ஏந்திழை உன்னை - ஏகா துள்ளத் திருளினைப் போக்க, நாடி வந்தனன்! நன்மலர் தாங்கி 露盘 ஆடி அசைந்திடும் அருங்கொடி போன்றே, நானும், . - - உன்நினை வென்னும் ஒருமலர் தாங்கிப்