பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 58 — நீட்டி யிதழ்தந்து நின்ற நிலையையும், கூட்டி னுடைந்ததேன் குடித்த காட்சியும், அன்னவன் கூறிய அழகுச் சொற்களும், அன்னவன் கூற்றுக் கவளின் பதிலும், வந்து வந்து வள்ளிக் கின்பம் தந்து தந்து தணிந்த நினைவால், பிசைந்த மாவிற் பண்ணிய பாவைபோல் அசைவின்றி நின்ருள்! அவன்வரச் சொன்ன இரவுசென் றங்கு எய்திடும் இன்பம் - விரவிட நெஞ்சு வெடிப்பது போன்றே 3 # இருந்த துடலும் எரிந்ததே! அக்கால் பெரியவர் வந்திடப் போய்க்கைக் கோவினை வாங்கி மூலையில் வைத்துட் சென்று, கூடத்துப் பானையின் குளிர்ந்த நீரைக் கொணர்ந்து கொடுத்திடக் கிழவர் வாங்கி, காலுங் கையும் கழுவிநீ ரருந்த, முறுக்கு மீசையில் முத்தாய்த் துளிப்புனல் இருக்க வள்ளி, இடி"யென நகைத்துத் “தளர்ந்த வயதில் தாத்தா முகத்தில் வளர்ந்த மீசை வடித்த கண்ணிர் 4 {} உரைப்ப தென்னவோ உணரேன்” என்ருர்! நரைத்த கிழவர் நானு வாறு, 'வஞ்சிக் கொடிக்கு வாய்த்த அறிவை விஞ்சிய ஒருவனே விரைந்து தேடி, மணஞ்செய் யாமைக்கு, மனமிக வருந்தி, வடித்த கண்ணிர் வற்றிடச் சினத்தால் துடித்த மீசையில் துளிர்த்தது நீரெனக் கூறிட வள்ளி, குலுங்கிக் குலுங்கி நகைத்தனள், அந்த நகைப்பால் கிழவர் இதுநாள் காணு இன்பம் எய்தினர்! 50 மதுமலர்க் குழலி மகிழ்வொடு மகிழ்வாய்த்