பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 59 — “தாத்தா! அதற்குத் தகுந்த வாருய், கூர்த்த அறிவொடும், குணத்தொடுங் கூடிய ஒருவர் உள்ளார். .' என்றவள் உணர்த்திய ஒருமொழி கிழவரின் உளத்தை நெகிழ்த்தது! "வள்ளி நீசொல வந்தது யாரை? சொல்லுக வென்ன, சொல்லிய சொற்களை ஏனுரைத் தோமென எண்ணிய தவளுளம்! வீனுரை யேவென விடவும் கிழவற்கு உளங்கொள வில்லை; உள்ளே வாம்மா, 6 0 அமர்ந்து பேசுவோம்; அறியே னிதுவரை' என்றே கிழவர் இயம்பிட அவளும் சென்றே யமர்ந்து, சிலநொடி தாழ்த்திப் பெரியவர் கைகளைப் பிடித்துத் தாத்தா அறியாப் பருவத் தன்னை, தந்தையாய் வளர்த்தீர்! எனக்கு வாடாப் பெருமையும் அளித்தீர்! ஏதும் அறியா வயதிற் பலகுறை செய்தும், பலமுறை சினவா துளமுயர்ந் தென்னை ஒறுக்கா திருந்தீர்! இன்னும் யானிவ் வுலகின் தரத்தில் 7 0 சின்ன பிள்ளையே! செய்தது தீங்காய் இருந்திடின் ஏசா திரங்கி யருளுக! பெருஞ்செயல் எனதெனின் பெருமையும் உமதே!” என்றவள் கூறினுள். எழில்மிகு கன்னத் தொழுகிய நீரை உணர்ந்த கிழவர் அழுதல் ஏனென தழகொளிச் சிலையே! சுட்ட பாலினைச் சுவைத்த பூனை கிட்டி நெருங்குதல் கேடென அறியும்! தீயவர் தம்மைத் தெரிந்திடில் நல்லவர் தம்மை யுடனே தெளிந்திட லாகும்! & 0 உலகம் அறியா துனக் கன்றேயோர் - உலுத்தன் உணர்த்தினன்; உன்மேல் எனக்கும்