பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 60 — நம்புதல் உண்டே நடந்ததை நவிலெனத், தும்பி மொய்குழற் ருேகை, மகிழ்ந்து, கண்டவன் தன்மேல் காதல் கொண்டதும், மண்டிய வழகையும், மலைத்தோள் தன்னையும் அன்றவன் கூறிய அரிய கருத்தையும், ஒன்றும் விடாம லுணர்த்திடப் பெரியவர், கேட்டு மகிழ்ந்து கிளத்திடு கின்ருர். கோட்டுப் பூவினைக் கொம்பினில் வளைத்துக் 90 கைகளில் வைத்துக் கண்டு மகிழ்பவன் பொய்ம்மை உளத்தவன்; போய்ப்போய் நாளும் பூத்த அழகைப் பார்த்து மகிழ்பவன், மெத்த அறிவினன்; மெய்மையன்! அதுபோல் ஒத்த முறையில் ஒழுகிடு நெஞ்சின் உணர்வை வளர்த்துன் உடலுணர் வெய்திட நினைவுகொள்’ என்று நிகழ்த்தினர்; வள்ளி இன்புற் முளே! இருப்பினும் இரவில் வருக வென்றே வனிதைக் குரைத்ததை மறைத்தே வைத்தனள், கிழவரும் 100 உரைத்த நிகழ்ச்சியால் உளமகிழ்ந் தாரே!