பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் : 1.3 கொட்டி விட்ட தேன்கூட்டைச்சுவைத்து நிற்கும் குறவாஇக் குறத்தியினுக் குறவா? வென்ருன் மகிழ்ந்தனள், சிங்கன் கொண்ட மாக்குன்றத் தோளை யெண்ணி! திகழ்ந்தவன் அறிவைக் கேட்டு, திகைப்புற்ற கிழவர் உள்ளம் நெகிழ்ந்தபோ திவளுள் ளத்தில் நிலைத்திட்ட பூரிப் பின்னும் திகழ்ந்ததம் முகத்தில் வானத் திகழொளி நிலவு போலே! வெள்ளிய நிலவு வான வெளியினில் மிதந்துள் ளத்தை அள்ளிய தவனின் எண்ணம் ஆழியின் அலைபோல் மோதும்! நள்ளிருட் போதில் அங்கு நடந்திடப் போவ தென்ன, வள்ளிதன் நெஞ்சை இன்பம் நிறைப்பதைக் கண்டு நின்ருள்! (வேறு) படுத்துள்ள கிழவரது, குறட்டை ஓங்க, பைங்கொடியோ நலுங்காது படுக்கை விட்டே, அடுத்துள்ள குன்றடியில் அருவி கொட்டற் கருகிலுள்ள புற்றரைக்கு விரைந்து சென்ருள்!