பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 62 – கடுத்துள்ள கால்களுக்குத் தேர்வு கூறி, கழறுகின்ற நெஞ்சினுக்குத் தணிவு கூறி, தடுத்துள்ள புதர்விட்டு வெளியில் வந்து, தடம்பார்த்துச் சிங்கனிதைப் பாடி நிற்பான்; (வேறு) எண்ணங்களைப் பெயர்த்தாள்-நெஞ்சில வள் எண்ணத்தை வைத்துச் சென்ருள்! கண்ணின் ஒளித்திாையில் அன்னவளின் கட்டெழில் தீட்டிச் சென்ருள்! பண்ணின் சுவை மொழியை-என்றன்செவிப் பக்கத் திசைக்க வைத்தாள்! விண்ணில் மண்ணில் அவளை-நான்தேடும் எண்ணம் மறந்தாளோ?-விரைந் தின்று வருவாளோ? போர்த்த கருமுகிலில்-கூந்தலுஞ்செம் பூவில் அவள் முகமும், ஆர்த்திடு வண்டசைவில்-மைவிழிகள் ஆடும் எழிற் கூத்தும், - கோத்திடும் முல்லைமொக்கில்பற்களும்மென் கோவைப் பழத்துதடும், பார்த்துயிர் வாழுகின்றேன்-என்பதையப் பாவை மறந்தாளோ?-இன்று பார்க்க வருவாளோ? (வேறு) வானத்து நிலவொளியால் வழிகள் கண்டு, வந்தாளக் கோதை அவன் விரைந்து சென்று 'மீனத்து வெட்டெல்லாம் தோற்றுப் போகும் மீன்விழியின் வெட்டிற்கு வாயுண் டாயின், 3