பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 63 — 'ஏனத்தான், நெடுநேரம் காக்க விட்டேன்! எனைமன்னிப் பீரென்றே இயம்பும் அன்ருே! வானத்து முழுநிலவே! வாவா!” வென்றே வஞ்சியின தொல்லியிடை பற்றிக் கொண்டான் 6 “என்னத்தான் தாத்தாவைத் துரங்க வைத்தே, எழுந்துவர ஆகாதோ நேரம்? நீங்கள் தின்னத்தான் துடிக்கின்றீர்! இடர்ப்பா டெல்லாம் தெரிவதில்லை என்றவுடன் அவன்பிணங்க, "பொன்னத்தான் அல்லவென் உயிரைக் காக்கும் போர்மறவர் அல்ல’வெனக் கொஞ்சிக் கெஞ்ச 'தின்னத்தேன், கேட்கத்தேன் வள்ளி பேச்சுத் தெவிட்டிடுவ துண்டோ வென் றணத்துக் (கொண்டான் 7 அணைத்தவனின் கைப்பிடியை விலக்கிக் கூந்தல் அவிழ்தல்போ லாய்நழுவ அதனை யேந்தி, இணைத்திடுதல் போலவனும் இடையைத் தொட்டே, இழுத்தருகில் நிறுத்தியவள் முகத்தை யேந்தி, பிணைத்தகொடி தளர்வதனுட் பொருளைக் கூருய், பெண்பாவாய்!” என்னவளோ, நாணத் தாலே பிணக்கமுற்ருள் போல்முகத்தைக் கவிழ்த்த வாறு பேச்சின்றி நின்றவளைப் பார்த்துச் சொல்வான்! 8 - (வேறு) "நானிருக்க எனதாசைக் குகந்தவள் நீயிருக்க-நம்மைச் சுற்றிலும் சோலை மறைப்பிருக்க-அதன் நட்ட நடுவினில் தனித்திருக்க-இன்னும் நாணமென்ன? உனக்கான தென்ன? இளம் நாணலிடையினைத் தந்திடடி - 9 தேனிருக்கும் மலர் வாயிருக்கும் மணம் உள்ளிருக்கும்தின்றிடத் தீராப் பசியிருக்கும்-இரு [அதைத் குன்றெனத் தோள்களி ரண்டிருக்கும்.இன்னும் தேவையென்ன உனக்கான தென்ன?-இளந் தென்றலென வந்தி னந்திட்டி! - 70