பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டையும் பள்ளி மாணவப்பருவத்திலேயே எழுதி வைத்திருப்பதாகவும், அவற்றுள் ‘பூக்காரி'யைப் போட்டிக்கு அனுப்பலாம் என்றும் அவரிடம் தயங்கித் தயங்கி கூறினேன். உடனே, அதை எடுத்துக் கொண்டுவா’ என்று கட்டளை போட்டார். அதன் பின்னர்ப் பூக்காரியின் பழந்தாள்தொகுதி, மீண்டும் சரிசெய்யப் பெற்றது: சில திருத்தங்களுடன் அன்பர்களைக் கொண்டு, ஒரு கிழமைக்குள் செவ்விதாகப் படியெடுக்கப் பெற்ற்து. அதில் தலையாய திருத்தமாகப், பூக்காரி' என்று அதற்கிட்டிருந்த பெயரைக் கொய்யாக்கனி என்று மாற்றம் செய்தேன். கெய்யாக்கனி' என் கழியிளமைப்பொழுதி லேயே எழுதப் பெற்றதால், அவ்விளைமைப் பொழு தில் எனக்கிருந்த அறிவுணர்வு, செய்யுளுணர்வு, யாப்பமைதி, யாப்பிலக்கண அறிவு, சொல்லாட்சி ஆகியவற்றில், பல வளர்ச்சி பெருத நிலைகள், அதைச் சரிசெய்ய முற்பட்ட பொழுது, எனக்குத் தெள்ளத் தெளிவாகத் தெரிந்தன. தூய தமிழுணர்வு அக்காலத்திலேயே என் உள்ளத்தில் கால் கொண்டி ருந்தாலும், போதிய தமிழறிவு வாயாதிருந்தமை பால், நூல் நெடுகலும் பற்பல வடசொற்கள் கலந்தி ருந்தன. அவற்ருல் பெருவருத்தமும் அடைந்தேன். பல வடசொற்கள் பல பாடல்களின் எதுகைத் தொடையிலேயே வந்து இடர்தந்து நின்றன. எனினும் அவற்றை மாற்றித் தூயதமிழ்ச் சொற்கள் பெய்வதற்கு நான் விருப்பம் கொள்ள